நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட லட்சுமணன் சென்னையில் வசித்து வருகிறார். அவர் குடும்பத்துக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் பாளையங்கோட்டை வி எம் சத்திரம் ஆச்சி மடம் பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு 2.5 கோடி ஆகும். இந்நிலத்தை தனது தங்கை ஸ்ரீவள்ளிக்கு லட்சுமணன் தானம் அளித்துள்ளார்.
அந்நிலத்தை அருகில் உள்ள நில உரிமையாளரான ஜெரால்ட் செல்வராஜ் விலைக்கு கேட்டார். ஸ்ரீ வள்ளி மறுத்துவிட்டார். இந்நிலையில் கடந்த 2024 செப்டம்பரில் அந்நிலம் போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது லட்சுமணன் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணை அழைத்து வந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில்
ஆதார் அட்டை தயார் செய்து கீழ நத்தத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு பவர் பத்திரம் தருவது போல பதிவு செய்துள்ளனர். ராஜசேகர் அண்ட் நிலத்தை அண்ணாதுரை என்பவருக்கு விற்றதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து லட்சுமணன் நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணியிடம் புகார் செய்வதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார், சிட் பண்ட் உரிமையாளர் ஜெரால்டு செல்வராஜ்,,ராஜசேகர், அண்ணாதுரை நிர்மலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நிர்மலா போலீசார் இடம் சிக்கிyள்ளார். உள்ளனர்.
ஜெரால்டு செல்வராஜ் நெல்லையில் மூன்று இடங்களில் சிப்பண்டு நடத்தி வருகிறார். நில மோசடி போல் அதில் ஏதும் பணமோசடி செய்துள்ளாரா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








