திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரே அலங்கார் என்ற தியேட்டரில் உள்ளது. இந்த திரையரங்கில் இன்று அதிகாலை 4:30 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இரண்டு அல்லது மூன்று நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
.
தற்போது கங்குவார் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தாலும் இதற்கு முன்பு அமரன் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. அப்படத்திற்கு இப்பகுதியில் அதிக எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா அல்லது வேறு காரணத்திற்காக கொண்டு வீசப்பட்டதா என்று போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.