துபையிலிருந்து கடத்திய சுமார் 1 கிலோ தங்கம் மதுரையில் பிடிபட்டது

0
1089

மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபையில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் சுங்கத் துறையினர் விசாரணை செய்தனர்.

அப்போது, இராமநாதபுரம் மாவட்டம் புதுமாயக்குளத்தை சேர்ந்த நடராஜன் மகன் அஜித்குமார் (வயது 23) என்பவரிடமிருந்து 981.68 கிராம் தங்கம் 40.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.<தீக்ஷீ>இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த சேர்வைகாரன் ஊரணி மேல தெரு களஞ்சியம் என்பவரது மகன் பாலமுருக குமார் (வயது 27) என்பவரிடமிருந்து 220 கிராம் எடையில் மதிப்புள்ள ஒன்பது லட்ச ரூபா மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர்.

இதனையடுத்து, சுங்கத்துறையினர் இருவரிடம் தங்கம் கடத்திவரப்பட்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here