முக்கியத் துறைகளில் வளர்ச்சி குறைவு

0
1337

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட உதவும் 8 முக்கியத் துறைகள் கடந்த ஜூலை மாதத்தில் 2.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன என்று மத்திய அரசு வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆகியவற்றின் வளர்ச்சி குறைந்துள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் எட்டு உள்கட்டமைப்பு துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்த துறைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.

ஆனால், ஜூலை மாதம் இந்த 8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2.1 சதவீதமாகச் சுருங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே ஜுலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் 8 துறைகளின் உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.9 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here