நெல்லையில் பார் உரிமையாளர் கொலை

0
1422


நெல்லை பேட்டை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற கருத்தப்பாண்டி (54) இவர் பேட்டையை அடுத்துள்ள திருப்பணிக்கரிசல்குளம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் . இவரது உறவினர் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் சேர்ந்த முருகன், இவர் வளர்த்து வரும் ஆட்டை கடந்த மூன்று தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உள்பட சிலர் மீது முருகன் தனது உறவினர் கணேசன் மூலமாக ஆடு திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் .பாஸ்கரன் தரப்பினர் ஆடு திருடப்பட்டது தொடர்பாக முருகன் மற்றும் கணேசனிடம் சமரச பேச்சுவாரத்தைக்கு வந்துள்ளனர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டனர் .

இதனிடையே தினமும் இரவு நேரத்தில் கணேசன் திருப்பணிக்கரிசல் குளம் அருகே உள்ள பாரில் சென்று தங்குவது வழக்கம் இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாரில் தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப் , சுத்தமல்லி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் . பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆடு திருடப்பட்டதாக புகார் கொடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here