தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ள பன்னம்பாறை ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின்மாற்றி ( டிரான்ஸ்பார்மர் ) அமைப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஒரு வழியாக, கிராமத்திற்கு என்று தனியாக ஒரு மின்மாற்றி அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால் அனுமதி கிடைத்து ஓராண்டு காலம் ஆகியும் மின் மாற்றியை அமைத்து தராமல் இழுத்தடித்து வருகிறார்கள்.
அனுமதியின் அடிப்படையில் மின்மாற்றி அமையும் இடத்தருகே ஒரு மின் கம்பத்தை நட்டுவைத்து விட்டு தெருவில் ஆழக் குழியும் தோண்டினர். அதன் பின்பு அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
இதற்கிடையே, அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் ஜேசிபி இயந்திரம் மூலம் நட்ட மின் கம்பத்தை இடித்து சரித்து வைத்துள்ளார். அதையும் அதிகாரிகள் பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக சென்றுள்ளனர்,
மின்மாற்றி அமைக்கும் பணியை தடை செய்வதற்காக அதிகாரிகள் தூண்டுதலாலேயே இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் புகார் மனுக்கள் அளிக்க பட்டுள்ளது. . இனியும் நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் ஒன்றே தீர்வு என்று முடிவு செய்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.









