ஜம்மு காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் உள்ள மல்ஹார் என்ற இடத்தில் 40 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
உரிய நேரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரும் தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















