காஷ்மீர் பிரச்சினை பற்றி ராகுல் பேசி வந்ததையடுத்து அவரை காஷ்மீருக்கு வருமாறு ஆளுநர் சத்யபால் அழைத்தார்.
ராகுல் காந்தியும் தன்னுடன் இ.கம்யூ. ராஜா, திமுக சிவா, சரத் யாதவ் உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்களை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானார். நிலைமை மோசமானதை அறிந்த ஆளுநர், ‘ தற்போதைய சூழலில், அங்கு வரவேண்டாம்’ என மறுத்துச்சொல்லவேண்டிய நிலைக்கு ஆளானார்.
ஆனாலும், முன் வைத்த காலை பின் வைக்க விரும்பாத ராகுல்காந்தி, திட்டமிட்டபடியே செல்லியில் விமானம் ஏறினார். அவர் எதிர்பார்த்தது போலவே ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பலத்த போலீஸ், துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு இருந்தது.
அங்கு சென்றவர்களை தடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அங்கேயே நிறுத்தப்பட்ட அவர்கள் பின்னர் மீண்டும் டெல்லிக்கு விமானத்திலேற்றி திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து காஷ்மீர் ஆளுநர் சத்யபால் கூறுகையில், ‘ நல்லெண்ண அடிபப்டையில் ராகுல் காந்தியை அழைத்தேன். அவர் அதை அரசியலாக்கிவிட்டார்’ என்றார்.















