குடியுரிமை திருத்த சட்டத்தை 13 மாநிலங்களில் கொண்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பாக தனி மனித இடைவெளியை பின்பற்றி மூக கவசம் அணிந்து பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால் ராஜா, மாவட்ட துணை செயலாளர் முகம்மது யாசிர், பகுதி தலைவர் காதர் மைதீன், செயலாளர் அப்துல் நாசர், துணை செயலாளர் சம்சுதீன், அர்சத், அமானுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமலாக்குவதை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.









