பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வைகுண்ட ராஜன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான வி வி டவர் கட்டிடம் உள்ளது. அதில் தனக்கு உரிய பகுதியை அகமது என்பவரின் நிர்வாகத்தின் கீழ் வைகுண்டராஜன் நிர்வகித்து வருகிறார்.
அந்தக் கட்டடத்தில் கோழி இறைச்சி உணவு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இன்று அதிகாலை ஐந்து வக்கீல்கள் மற்றும் வாடகைதாரரின் ஆதரவாளர்களான 17 பேர் கடையின் பூட்டு சீலை உடைத்து உள்ளே இருந்த தங்களது பொருட்களை எடுக்க இதை அங்கிருந்த ரிசப்ஷினிஸ்ட் அவரை வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து பூட்டு உடைப்பில் ஈடுபட்ட ஐந்து வக்கீல்கள் உட்பட 17 பேரைப் பிடித்து அருகில் உள்ள விடுதி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது இதுவரை தெரியவில்லை.









