சென்னை விமான நிலையத்தில் அந்தமான் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

0
475

அந்தமானை சோ்ந்தவா் பாத்திமா(60).இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.அந்தமானில் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்றும் குணமடையவில்லை இதனால் கேரளாவில் உள்ள ஆயுா்வேத சிகிச்சைப்பெற விரும்பினாா்.

இதையடுத்து பாத்திமாவும்,அவருடைய கணவா் பீா்முகமதுவும்(64) இன்று மாலை இண்டிகோ விமானத்தில் அந்தமானிலிருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தனா்.

சென்னையிலிருந்து மாலை 6.15 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் கோவை வழியாக கேரளா செல்ல திட்டமிட்டிருந்தனா்.அதன்படி அந்தமான் விமானத்தில் வந்த இவா்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு கோவை விமானத்தில் ஏற தயாராகிக்கொண்டிருந்தனா்.

அப்போது பாத்திமா திடீரென மயங்கி விழுந்தார் இதையடுத்து சென்னை விமானநிலைய மருத்துவ குழுவினா் விரைந்து வந்து,பரிசோதித்துவிட்டு,பாத்திமா கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனா்.

உடனடியாக சென்னை விமானநிலைய போலீசாா் விரைந்து வந்து,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,விசாரணை நடத்துகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here