மும்பையை சேர்ந்த பெண் ஒருவர். இவர் சென்னைக்கு வர திட்டமிட்டார். ஏர்- இந்தியா விமானத்தில் மட்டும் தான் பயணிகளுடன் செல்ல பிராணியான நாய்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதால் இதற்காக தனது செல்ல பிராணியான பிலா என்ற நாயை அழைத்து வர முடிவு செய்தார்.
தனது செல்ல பிராணியை விமானத்தில் அழைத்து வந்தால் பிற பயணிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அருகில் அமர்ந்து இருக்க கூடிய பயணிகள் முக சுழிக்கலாம் என்பதால் மும்பையில் இருந்து சென்னை வரக்கூடிய விமானத்தில் பிசினஸ் வகுப்பில் இருந்த 12 இருக்கைகள் இருந்தன. 12 இருக்கைகளையும் ரூ. இரண்டரை லட்சம் தந்து டிக்கெட் பதிவு செய்தார். பின்னர் தனது செல்ல நாயுடன் மும்பையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். பிசின்ஸ் வகுப்பில் பெண் தனது நாயுடன் வந்ததை கண்ட விமான பணியாளர்கள் பாராட்டினார்கள்.












