கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

0
764

நெல்லை மாவட்டம் உவரி கடல் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள துரைகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (16) மற்றும் அவரது அண்ணன் ஆக்னல் (18)ஆகிய இருவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்

இதுகுறித்து கூடன்குளம் கடலோர காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் .

வள்ளியூர் அருகே உள்ள கீழ துரை குடியிருப்பைச் சேர்ந்த அருள் என்பவர் தனது குடும்பத்துடன் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு வழிபட சென்றுள்ளார். வழிபாட்டு முடித்துவிட்டு அவரது மகன்கள் ஆக்னல் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் வேளாங்கண்ணி மாதா குருசடி அருகே கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடல் அலை அதிக வேகத்துடன் வீசிய தினால் கடல் அலையில் சிக்கினார். இதனையடுத்து மீனவர்கள் அவர்களை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுபற்றி கூடன்குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆக்னல் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் அண்ணன் தம்பி என்பதுடன் அவர்கள் இருவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. இதனால் துரை குடியிருப்பு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here