பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளாக பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மதுரை தெற்குவாசல் பகுதியில்அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொழிலாளருக்கு விரோதமான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவும், தனியார்மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2020 கைவிடக் கோரியும், ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கிகள், அரசு போக்குவரத்து, பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பெட்ரோலிய நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏழு தொழிற்சங்க அமைப்புகள் கலந்து கொண்டனர்.














