கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொடுமை – கணவர் மீது மனைவி புகார்

0
1247

மார்த்தாண்டத்தை அடுத்த செங்கோடி, மாத்தாரைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 27). இவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், கூறி இருப்பதாவது:-

எனக்கும், சுவாமியார் மடம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் ராஜீவ் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்தின்போது, 65 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

எனது பெற்றோருக்கு நான், ஒரே மகள் என்பதால் எனது பெயரில் சொத்துக்கள் உள்ளன. திருமணம் முடிந்த நாள் முதல் சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி தரும்படி கணவர் தொல்லை கொடுத்தார்.

மேலும் என் கணவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவருடன் சேர்ந்து என்னையும், என் குழந்தையையும் கணவர் மிரட்டுகிறார். எனது நகைகளை கணவர் வீட்டார் விற்று ஆடம்பரமாக செலவு செய்து விட்டனர்.

இப்போது கணவரும், அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து என்னையும், என் குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.எனது நகையையும் மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார். சுபாஷினி அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் ஜோன்ஸ் ராஜீவ் மற்றும் கள்ளக்காதலி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here