மளிகை பொருளில் முதலீடு செய்யக் கூறி பல கோடி பண மோசடி: தொழிலதிபர் கைது

0
560

மளிகைப்
பொருட்களில் 35 ஆயிரம் முதலீடு செய்தால், வாரம் 2500 அல்லது மளிகைப்பொருட்களாக கிடைக்கும் என நூதன முறையில் சீட்டு நடத்தி மோசடி செய்த அரக்கோணத்தைச் சேர்ந்த சிவன் நரேந்திரன் உட்பட 12 பேர் மீது பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சிவன் நரேந்திரன் உட்பட 12 பேர் மீது
3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 2 கார்கள் மற்றும் 10 ஏக்கர் நிலத்தையும் மோசடி செய்த பணத்தில் வாங்கியதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவன் நரேந்திரனை கைது செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலமாக வேறு எங்கேனும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளாரா என்ற விவரங்களை சேகரிக்க உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here