ஒலிம்பிக் வாள் வீச்சு: போராடி தோற்ற பவானி தேவி

0
483

வாள்வீச்சில் இந்தியாவின் சார்பில் முதன் முறையாக களமிறங்கிய பவானி தேவி, தனது முதல் போட்டியிலேயே 15-3 என துனிஷிய வீராங்கனையை வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.

2ஆவது சுற்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான பிருநெட்டுடன் மோதினார். துவக்கத்தில் சுணக்கம் காட்டினாலும் இறுதியில் கடினமாக போராடி 7-15 என்ற புள்ளியில் தோல்வியை தழுவினார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் களமிறங்கிய முதல் ஃபென்ஸிங் வீராங்கனை நம் வட சென்னையை சேர்ந்த பவானி தேவி என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதேபோல், ஃபென்ஸிங்கில் இந்தியாவின் முதல் வெற்றியை இவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here