ஒலிம்பிக் வரலாற்றில், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் | இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் லக்ஷ்யா சென்.
உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவன் கோட்டத்திலுள்ள அல்மோராவில் பிறந்தார். தற்போது உலக இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார். 2017ல் உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடம் வகித்தார்.
2018ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் தங்கமும், 2021ல் ஸ்பெயினில் நடைபெற்ற உலகப் போட்டிகளில் தாமிரப் பதக்கமும் 2022 சனவரியில் புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் திறந்தசுற்றுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.