திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.21.18 லட்சம், 134 கிராம் தங்கம்

0
518

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில், உண்டியல் திறந்து எண்ணப்பட்ட தில், ரூபாய்.21லட்சத்து 18 ஆயிரத்து 923 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 134 கிராம், வெள்ளி 1 கிலோ 80 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கார்த்திகை மாத காணிக்கை உண்டியல் திறப்பு இன்று நடைபெற்றது.
அதில், பணம் ரூ.21 லட்சத்து, 18 ஆயிரத்து 923 ரூபாய், தங்கம் 135 கிராம், வெள்ளி 1 கிலோ 80 கிராம் இருந்தது.


இதில், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் இராமசாமி முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here