ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக ஏரலுக்கு சென்றுள்ளார். அப்போது வெளியூரில் இருந்து ஏரலுக்கு உரம் ஏற்றி ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது. இதனால் உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் முத்துவின் கழுத்தை சுற்றி விழுந்துள்ளது.

இதில் முத்து தூக்கி எறியப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.