சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லதா தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்ய நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த ஆலயத்தில் உள்ள முக்குருணி பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனை தட்டை வழங்கியுள்ளார். ஆனால் தீட்சிதரோ அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே மந்திரம் கூட சொல்லாமல் தீபாராதனை காட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லதா கேட்டதால் ஆத்திரமடைந்த தீட்சிதர் அவரை தாக்கியுள்ளார். இதனால் லதா போலீஸில் புகார் அளிக்க, ரவுடி தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.














