கிரேக்க நாட்டில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவிவருகிறது. அதை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும், காட்டுத் தீயால் வீடு, உடமைகளை இழந்த மக்களின் வலியை உணர்வதாகவும் அந்நாட்டு பிரதமர் கிரியக்கோஷ் மெக்சோடக்கீஸ்கூறினார்.
காட்டுத் தீயை அணைக்க 500 மில்லியன் டாலர் பணத்தை அறிவித்த பிரதமர், தீயால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்ல்ல, தன் நாட்டில் எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறியதால் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் அவர்.