அங்கீகாரம் பெற்ற செவிலியப் படிப்பு பற்றி அறிவிப்பு

0
582


அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் படிப்பு பற்றி தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் வழங்குகிறார்கள். இந்த சான்றிதழ்களை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது.


தமிழ்நாடு நர்சிங் கவுன்சியின் சட்டப் பிரிவு 12 (a) (1) மற்றும் (2)ன் படி இதுப்போன்ற போலி படிப்புகளை நர்சிங் என்ற பெயரில் நடத்தும் நிறுவனம், சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது அபராதமும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மேலும் சென்னை உயர்நீதி மன்ற ஆணை WP No.16556 of 2014 நகல் 13.04.2015-ன் படி போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்களின் மீது தமிழக அரசின் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.

இந்த மாணவ , மாணவியர்கள் எந்த ஒரு மருத்துவமனைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட செவிலியராக பணிபுரிய இயலாது மற்றும் நர்சிங் கவுண்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இயலாது. அங்கிகாரம் இல்லா சான்றிதழ் கொண்டு பணிபுரிவதாக நர்சிங் கவுன்சிலின் கவனத்திற்கு தகவல் வந்தால் கவுன்சிலின் சட்டப்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் விவரங்கள்:

டிப்ளமா இன் நர்சிங் அஸிஸ்டென்ட் கோர்ஸ் (Diploma.in Nursing Assistant Course) (6 months / 2 years)

டிப்ளமா இன் நர்சிங் (Diploma in Nursing) (2 years)

டிப்ளமா இன் ஃபர்ஸ்ட் எய்டு நர்சிங் (Diploma in First Aid Nursing) (2 years)

வில்லேஜ் ஹெல்த் நர்சிங் (Vilage Health Nursing) (2 years) .

டிப்ளமா இன் நர்சிங் எய்டு (Diploma in Nursing Aid) (2 years)

டிப்ளமா இன் ஃபர்ஸ்ட் எய்டு & ப்ராக்டிகல் நாசிங் (Diploma in First Aid & Practical Nursing)

டிப்ளமா இன் ப்ராக்டிகல் நாசிங் (Diploma in Practical Nursing) (1 yr / 2 yrs)

சர்டிஃபிகேட் இன் நர்சிங் (Certificate in Nursing) (1 year)

அட்வான்ஸ்டு டிப்ளமா இன் நாசிங் அஸிஸ்டென்ட் (Advanced Diploma in Nursing Assistant) (2 years)

டிப்ளமா இன் ஹெல்த அஸிஸ்டென்ஸ் (Diploma in Health Assistance (1 yr)

நர்ஸ் டெக்னிஸியன் கோர்ஸ் (Nurse Technician Coursa)

ஹெல்த் கைடு கோர்ஸ் (Health Guide Course)

சர்டிஃபிகேட் இன் ஹெல்த் அஸிஸ்டென்ட் (Certificate in Health Assistant)

சர்டிஃபிகேட் இன் ஹாஸ்பிட்டல் அஸிஸ்டென்ட் (Certificate in Hospital Assistant)

சாடிஃபிகேட் இன் பெட்ஸைடு அஸிஸ்டென்ட் (Certificate in Bedside Assistant)

சாடிஃபிகேட் இன் பேஷன்ட் கேர் (Certificate in Patient Care)

சர்டிஃபிகேட் இன் ஹோம் ஹெல்த் கேர் (Certificate in Home Health Care)

எனவே இக்குழுமத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அனைவரும் இக்குழுமத்திலிருந்து 2018-2019 ஆண்டுக்கான அங்கீகார ஆணையை இக்குழுமத்தின் 11(2) (c) ன் சட்டப்படி (Tamilnadu Act: il & XXVI of
1926 & 1960) கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் :

1) Certificate Course in Auxiliary Nursing- Midwifery

2) Diploma in General Nursing & Midwifery

3) B.Sc., (Nursing) ஆகியவை மட்டுமே

எனவே, பொதுமக்கள் இவ்வாறான பயிற்சிகள் நடத்துபவர்கள் விவரங்களை இக்குழுமத்தின் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கலாம்.

இத்தகைய நிறுவனங்கள் தானாக முன்வந்து மேற்கூறிய பயிற்சிகளை நிறுத்திவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்மையெனில், அத்தகைய நிறுவனங்களின் மீது கவுன்சிலின் விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி உரியநடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்று தமிழ்நாடு செவிலியர் குழுமம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here