படிக்கட்டில் நின்றதை தட்டிக் கேட்டதால் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

0
486

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலையில் சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை பிராட்வேயில் இருந்து ஆலந்தூர் நோக்கி புறப்பட்ட பேருந்து டாக்டர் நடேசன் சாலை துலுக்கானத்தம்மன் கோயில் அருகே வந்த போது அடையாளம் தெரியாத நபர் பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டதாக பேருந்தின் ஓட்டுநர் அண்ணாதுரை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சோதனை மேற்கொண்டபோது டாக்டர் பேசன் சாலையிலுள்ள என் கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மறைந்திருந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்

விசாரணையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நரேஷ் என்பதும் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததை கேட்டதற்கு இறங்கி கல்லெடுத்து கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்துள்ளார்

அவர் மீது வழக்கு பதிவு செய்த ஐஸ்ஹவுஸ் போலீசார் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here