சேவை செய்தி: மின் நுகர்வோர் சேவை மையம்

0
513

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக பொதுமக்களிடமிருந்து பெறும் புகார்களை ஒருங்கிணைக்க 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் 20.06.2021ல் சென்னையில் தொடங்கிவைத்தார்.
9498794987 என்னும் செல்போன் எண்ணில் பெறப்படும் புகார்களை சென்னை மின்னகம் தலைமை அலுவலகம் பெற்று சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் அனுப்பி வைக்கும்.


அதுமட்டுமல்ல, அப்புகார்கள் மின் பகிர்மான வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி பொறியாளர் மற்றும் உயரதிகாரிகள் செல்போன் எண்களை கொண்ட வாட்ஸ்ஆப் குரூப்பிற்கும் அனுப்பப்படுகிறது. புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வட்ட அளவில் செயல்படும் மின்னகத்திற்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு அந்த வட்ட அளவிலான மின்னகம் தகவல் தெரிவிக்கிறது. எனவே, பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு மின்னகம் -மின் நுகர்வோர் சேவை எண்ணை (9498794987) தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here