பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ போலீசார் இன்று தாக்கல் செய்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந் நிலையில் அருளானந்தம் ஹெரான் பால் மற்றும் பாபு ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி மாதம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மாதம் அருண்குமார் என்பவரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை விசாரிக்கும் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அருளானந்தம் ஹெரான்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 4 பேர் மீதும் சிபிஐ போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில் இன்று வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை .

விரைவில் சிபிஐ போலீசார் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கையின் நகல் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேருக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














