தும்பை விட்டு வாலை பிடித்த கதையாய், கஞ்சா வியாபாரிகளை விட்டுவிட்டு, புகைப்பவர்களை பிடித்து வழக்கு போட்டு போதையை ஒழித்து வருகிறது தமிழ்நாடு காவல்துறை.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பெட்டைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கஞ்சா வாங்கிய போது பிடித்த போலீசு, அவரது பைக்கையும் பறிமுதல் செய்தது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகாதேவன்குளத்தை சேர்ந்த திமுக செயலாளர் சுடலைமணி, கேஸ் செலவுக்காக, பைக் ஆர்சி புத்தகத்தை வாங்கிக் கொண்டு கந்து வட்டிக்கு ஐயாயிரம் ரூபாய் கடன் கொடுத்ததோடு, பைக்கை மீட்க போலீசுக்கு பத்தாயிரம் கொடுக்க வேண்டுமென்று ஆறுமுகத்திடம் ஆட்டையை போட முயற்சித்தார்.
சுடலை மணியின் சூழ்ச்சியை ஒருவாறு புரிந்துகொண்ட ஆறுமுகம், தாயாரை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டதோடு, மற்றொரு பிரமுகர் மூலம் பைக்கை வெளியே எடுத்துவிட்டார்.
இந்நிலையில், பைக்கை அவரிடம் கொடுத்து விட்ட போலீசு, மறுநாளே அதை திரும்ப ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றது. கடந்த ஆண்டு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியதாக ஏதோ வழக்கு இருக்கிறதாம்.
எதுவாயினும், சுடலைமணி போல் திசையன்விளை போலீஸ் வட்டாரத்தில் ஏராளமான புரோக்கர்கள் சுற்றுகின்றனர். பெரும்பாலானோர் வட்டார ஆளுங்கட்சி பிரமுகர்களின் பெயர்களை சொல்லியே கலெக்ஷன் பார்க்கிறார்கள் என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
போலீஸ் பெயரைச் சொல்லி சுடலைமணி பேரம் பேசிய ஆடியோ வெளியானதால இந்த ஆக்சன் என்கின்றனர் போலீஸ் நண்பர்கள்.
ஆறுமுகத்திடம் சுடலைமணி பேசிய ஆடியோ;









