செய்யாற்று படுகையில் சாராயம் அழிப்பு

0
512

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி செய்யாறு படுகையில் உள்ள எரிமேடை மயானம் அருகே முட்புதரில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதாக செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பொறுப்பு உதவி ஆய்வாளர் சுமன், காவலர்கள் முருகானந்தம், சம்பத், ஏழுமலை, குரு உள்ளடங்கிய குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தபோது சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராய உற்பத்தி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே கள்ளச்சாராய உற்பத்தியை தரையில் ஊற்றி அழித்து, உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here