செங்கம் தாலுகா அலுவலகத்தில் ராணுவவீரர் தீக்குளிக்க முயற்சி

0
453

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் உள்ள கீழ் சேராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காசாம்பூ மகன் ரமேஷ் (எ) ஏழுமலை ராணுவ வீரர். இவர் 2019-ஆம் ஆண்டு குடும்ப வாரிசு உறுப்பினர்கள் விருப்பத்துடன் அதே பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலகம் உதவியாளர் பழனி என்பவருக்கு பத்திர பதிவு அலுவலகத்தில் விற்பனை உடன்படிக்கை பதிவு ஏற்படுத்தி ரூபாய் 5 லட்சம் முன்பணமாக பெற்றார். ரூ.50 ஆயிரம் பாக்கியாக இருந்து வந்தது.

இந் நிலையில் ராணுவ வீரர் ரமேஷ் உறவினர் வேடியப்பன் அதிக விலைக்கு நிலத்தை வாங்கிக் கொள்வதாக தெரிவித்த ஆசை வார்த்தையில் மனம் மாறிய ராணுவ வீரர் , நிலத்தை கிரயம் பெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பழனியிடமிருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இரண்டொரு தினங்களில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here