நெல்லையில் இருந்து சாத்தான் குளத்திற்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. இப்படித்தான் நேற்று இரவு 9:30 மணி அளவில் சாத்தான்குளத்துக்கு புறப்பட வேண்டிய 65E பேருந்து வரவில்லை. 10 மணி வரை எதிர்பார்த்த சாத்தான்குளம் பகுதி பயணிகள், அது வராததால் திடீரென்று பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நாகர்கோவில் செல்லும் பஸ் பயணம் தடைபட்டது. இதை எடுத்து பேருந்து நிலையத்தில் நின்றிருந்த காவல்துறையினரும் காவலர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்சராகி நின்றிருந்த பேருந்து10:30 மணி அளவில் நிலையத்துக்கு வந்தது. அதன் பின்பு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.








