ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசா பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க பெண்ணும், கண்ணமங்கலம் கூட்டுரோடு இந்திரா நகரை சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க பெண்ணூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானார்கள்.

இவர்களது உடல்களை ஆற்காடு மற்றும் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பெற்று உயிரிழந்தவர்களின் மதச் சம்பிரதாயத்தின்படி அவரவர் சொந்த ஊர்களில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.











