நகை அடகு கடைக்காரரை ஏமாற்றிய பலே வாலிபர் கைது

0
1035


கோவை இபி காலனி பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் சீதாராமர் (46). இவர் உப்பார வீதி பகுதியில் ஆர்கே பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாயில் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகன் மணிகண்டன்( 30) என்பவர் கடந்த மாதத்தில் தனது நகைகள் வங்கியில் வங்கியில் அடமானத்தில் உள்ளது என்றும் அதை மீட்டு உங்களது கடையில் வைத்து கூடுதல் தொகையை தனக்கு தருமாறு கேட்டுள்ளார் .இதை அடுத்து சீதாராமனும் அவ்வாறு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சீதாராமனின் நகை அடகு கடைக்கு வந்த மணிகண்டனும் அவரது நண்பர் ஒருவரும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெடரல் பேங்க்கில் நகை 300 கிராம் உள்ளது என்றும் அதற்கு 12 லட்ச ரூபாய் நகை பணம் இருந்தால் மீட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பிய சீதாராமன் 12 லட்ச ரூபாய் பணத்துடன் சென்று வங்கியில் நகையை மீட்டார். இதையடுத்து மீட்கப்பட்ட நகைகளுடன் சீதாராமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உப்பாரா வீதியிலுள்ள சீதாராமனின் நகை அடகு கடைக்கு வந்தனர. அங்கு வந்து நகையை சோதனை செய்தபோது 300 கிராம் நகை க்கு பதிலாக 204 கிராம் நகை மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 96 கிராம் நகை குறைவது குறித்து சீதாராமன் மணிகண்டனிடம் கேட்டபொழுது ஒரு நகையை தனது நண்பரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பின்னர் தருவதாகவும் கூறி இருக்கிறார்.

இதையடுத்து இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது. தொடர்ந்து சீதாராமன் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here