சோற்றுக்குள் பிளேடு ஓட்டலுக்கு நோட்டீசு

0
460

:

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது மனைவி ,மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

வீட்டில், சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது, சோற்றில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முகமது உணவுப்
பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு ம், பணியாளர்கள் மருத்துவசான்று இன்றியும் தலையுறை அணியாமலும் உணவு சமைத்து வந்தது தெரிய வந்தது.

இதனைத்
தொடர்ந்து, வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக்
கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக்கொடுத்துள்ளது. மேலும், உணவுப்
பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here