தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து மனுக்களை பெற உள்ளார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.