காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அரசு அறிவித்து அதற்கான சிறப்பு சட்டம் இயற்றியது அதன் மூலம் அந்த பூமியில் பெட்ரோல் எரி எண்ணெய் கேஸ் போன்றவை எடுக்கப்படும் அபாயம் இருக்காது வேளாண் பூமியாக தொடரும் என்று நம்பப்பட்டது ஆனால் அந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே குறிச்சி வடசேரி பகுதியில் ஷேல் கியாஸ் எடுக்க ஒன்றிய அரசு ஏலம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகள் தன்னிச்சையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.











