தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி இவரது பாட்டி இறந்துவிட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை.
மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர் ஞானபிரகாசம் மாணவியை திட்டியதோடு, அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவரை தோப்புக்கரணம் போடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கால் வலியோடு அவமானமும் அடைந்த மாணவி, இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து தலைமை ஆசிரியை கனக ரத்தினமணியை கைது செய்தனர். அவர் ஞானப்பிரகாசத்தை தப்பிக்க வைத்துள்ளார். தலைமறைவான ஆசிரியர் ஞானப்பிரகாசத்தை தேடி வருகின்றனர்.








