உணவு கேட்டு மருத்துவர்கள் போராட்டம்

0
1220


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பணி செய்யும் மருத்துவர்களுக்கு தங்கும் இடம், உணவு வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் அறைமுன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில். ‘நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பிரதான மருத்துவமனை முற்றிலும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .கடந்த ஒருவார காலமாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொரோனா வார்டுகளில் பணிசெய்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின்போது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தனி அறை, உணவு வழங்கப்பட்டது. இந்த முறை எதுவும் வழங்கப்படவில்லை. தினமும் பணி முடித்து வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலையில் இவை தேவையாகிறது.
எங்களுக்கு உரிய இடம், உணவு வழங்கவில்லை என்றால் அவர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவபணிகள் பாதிக்காத வண்ணம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here