கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற பெயரில் பள்ளி நடத்தி வந்த போலி சாமியார் சிவசங்கர் பாபா அந்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வலைத்தளங்களில் புகார் பரவியது சில மாணவிகள் நேரிலும் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து குழந்தைகள் பெண்கள் நல ஆணையத்தின் விசாரணையும் நடந்தது.ஆணையத்தின் முன்பு ஆஜராக அவருக்கு அறிவிப்பு கொடுத்த போது மருத்துவமனையில் இருப்பதாக கூறி அதை தவிர்த்தார். இடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிவசங்கர் பாபா தலைமறைவானார்.