மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் இருபத்தொரு வயது பெண். இவர் முனிச்சாலை பழைய குயவர்பாளையம் பாளையத்தில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த கடையின் உரிமையாளர் செல்வம் இவர் இந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெராக்ஸ் கடை உரிமையாளர் செல்வத்தை கைது செய்தனர்.












