டுவிட்டரில் சமீப காலமாக வன்முறையை தூண்டும் வகையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு கணக்குகளில் இருந்து
பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை போலி என தெரியாத நெட்டிசன்கள் அது குறித்து மீம்ஸ், ட்ரோல் ஆகியவற்றை போடுகின்றனர். நடக்காத ஒரு செய்திக்கு இணைய போரும் ஏற்படுகிறது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஆகியவற்றை டுவிட்டரில் பதிவிட்ட சிலர், இந்தியா நடத்திய துப்பாக்கி சூட்டில் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை பாருங்கள் என இருந்தது.
இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆராய்ந்ததில் அவைகள் அனைத்தும் சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் புகைப்படங்கள் என தெரிந்தது. இதனையடுத்து நாட்டிற்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என புகார்கள் எழுந்தது. இதனையொட்டி தற்போது ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.













