தண்ணீர் தொட்டியில் மூழ்கிய 4 வயது குழந்தை

0
1276

சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகர், வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (31) இவர் அயனிங் கடை வைத்து நடத்தி வருகின்றார்.இவரது மனைவி சரஸ்வதி (29) இவர்களுக்கு 6 வயதில் கயல்விழி என்கிற பெண் குழந்தையும் 4 வயதில் சர்வேஷ் ஆண் குழந்தையும் உள்ளன(ர் ).

இந்த நிலையில் இன்று காலை சர்வேஷ் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான் .

அப்போது பெற்றோர்கள் இருவரும் வீட்டின் உள்ளே இருந்துள்ளனர், வெளியில் வந்து பார்த்தபோது சர்வேஷ் காணவில்லை.பதறிப்போய் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை தண்ணீர் தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த பலகை தள்ளி இருந்ததை பார்த்தும் அதை எடுத்து பார்த்தபோது தண்ணீருக்குள் சர்வேஷ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.உடனே இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இறந்து பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here