தேனி மாவட்ட மீனவரணி செயலாளர் வைகை கருப்பு ஜீ என்பவர் இன்று தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
அதிமுக எனும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே! மாண்புமிகு OPS அவர்களே!
உங்கள் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம்!! என்று அச்சிடப்பட்டுள்ள அந்த பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக நெல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை தொடர்ந்து தேனியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











