சென்னையிலிருந்து இன்று காலை 117 பயணிகள் உட்பட 123 பேருடன் அந்தமான் சென்று கொண்டிருந்த ஏா் இந்தியா விமானம் நடுவானில் பறந்தபோது,திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டு, சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.விமானத்திலிருந்த 123 போ் அதிஷ்ட வசமாக உயிா் தப்பினா்.
சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏா்இந்தியா விமானம் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது.விமானத்தில் 117 பயணிகள் 6 விமான ஊழியா்கள் உட்பட 123 போ் இருந்தனா்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தாா்.இந்த நிலையில் விமானத்தை தொடா்ந்து இயக்கினால்,பெரும் ஆபத்து என்பதை விமானி உணா்ந்தாா்.
இதையடுத்து விமானி அவசரமாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
உடனடியாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள்,விமானத்தை தொடா்ந்து இயக்க வேண்டாம்,உடனடியாக சென்னைக்கே திருமபி வரும்படி உத்தரவு பிறப்பித்தனா்.மேலும் சென்னையில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போா்க்கால அடிப்படையில் துரிதமாக செய்ய விமானநிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.
இதையடுத்து ஏா்இந்தியா விமானம் சென்னை விமானநிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.விமானத்திலிருந்த 123 பேரும் அதிஷ்ட வசமாக உயிா் தப்பினா்.
அதன்பின்பு பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமானநிலைய பயணிகள் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.விமான பொறியாளா்கள் விமானத்தில் ஏறி,விமான இயந்திரங்களை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனா்.ஏா்இந்தியா அதிகாரிகள் பயணிகளை மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்கின்றனா்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி விமானநிலைய உயா்அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா்.இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Plz yous Airport file shat