தமிழகத்தின் தென் பகுதியில் பெருவாரியாக தேவேந்திர குல வேளாளர்கள் வசிக்கின்றனர். நாங்குநேரி இடைத்தேர்தலில் இவர்கள் ஆதரவு வழக்கம்போல் அதிமுகவுக்கு இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், அனைத்து தேவேந்திரர் குல பிரிவுகளையும் இணைத்து ஒரே பெயரில் அழைக்கும் ஆணையை பிறப்பிக்க கோரி ஊரெங்கும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.
அதுமட்டுமின்றி தங்கள் கட்சி பேனரை கொடியை பயன்படுத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியினர் உறுதிபட தெரிவித்து விட்டனர்.சில இடங்களில் அதிமுக வாகனங்களில் கட்டப்பட்ட பேனர்களும் காரியாலயங்களில் கட்டிய கொடிகளும் அகற்றப்பட்டன. ஜான்பாண்டியன் மற்றும் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்களும் இந்த கோரிக்கையில் திடமாக நின்றனர்.
இந்நிலையில் சென்னையில் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோரை அழைத்து கருத்து கேட்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். பல்வேறு சமாதானம் கூறி கிருஷ்ணசாமியை ஆதரவு நிலைக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களில் நாங்குநேரி தொகுதியில் மிகுந்துள்ள பருத்திிக்கோட்டை நாாட்டார்் பிரிவினர் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக ஊன்றி நிற்கின்றனர்.
சமுதாய தலைவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் தாங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தேர்தல் புறக்கணிப்பு செய்வது உறுதி என்று கூறுகின்றனர்.. இதற்காக நெல்லையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.