சென்னையில் ஊரடங்கு காலகட்டத்தில் குற்றச் சம்பவஙளில் தொடர்புள்ளவர்களையும் கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வாறு வட சென்னை பகுதியில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய அஜய், அஜித்குமார், ஜெகதீஸ்வரன் என்ற 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
அப்போது அவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது போல் நடித்து, விலக்கவந்த சப் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பியோடியதாக போலீசார் கூறுகின்றனர். மூவரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.












