கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 3 போலீசாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் நிலையம் முழுவது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதன் பின்னர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் போலீசாருக்கு அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.












