பாளை மத்திய சிறையில் கஞ்சா பரிமாற்றம், கைதிகளுக்கிடையே சாதி மோதல் போன்றவை பிரசித்தம். அங்கு பணிபுரியும் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதால் இவையெல்லாம் அடிக்கடி நிகழ்ந்துவந்தன. குறிப்பாக, மூன்றடைப்பு வாகைக்குளத்தை சேர்ந்த முத்து மனோ என்ற கைதி சிறையிலேயே சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டு, அதுகுறித்து சிறை அதிகாரிகள் மீது குற்ற வழக்குப் பதிய வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் \பாளை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் பணியாற்றிவரும் கண்காணிப்பாளர் சங்கர் பாளைக்கு மாற்றப்பட்டுள்ளார்., பாளை ஜெயிலர் பரசுராமன் மதுரைக்கும், மதுரையில் பணியாற்றிவரும் வசந்த கண்ணன் பாளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.












