சவுதியில் கடந்த 3 நாட்களாக எண்ணெய் கிணறுகள் பற்றியெரிவதற்கு யார் காரணம், சேதம் விரைவில் தடுக்கப்பட்டுவிடுமா என்றெல்லாம் பதற்றம் நிலவுகிறது.
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான இரண்டு கச்சா எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகள் அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட குட்டி ட்ரோன் விமானங்கள் கொண்டு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆலையின் முக்கிய பகுதிகள் எரிந்து நாசமடைந்து விட்டன.
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி புரட்சிப்படைகள் பொறுப்பேற்றுள்ளன. தங்கள் நாட்டு அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவுதி படை தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த தாக்குதலுக்கு ஈரானை காரணம் சொல்கிறது அமெரிக்க வெளியுறவுத்துறை. ஈரான் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
எண்ணெய் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவும், பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காகவும் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதாக சவுதி இளவரசர் கூறியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இரு எண்ணெய் கிடங்குகளிலும் இருந்த சேமிப்பில் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அழிந்துவிட்டதோடு, தினப்படி உற்பத்தியான 98 லட்சம் பேரலில் 5 {7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வரை உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் இழப்பு மற்றும் விநியோக குறைபாட்டை தவிர்க்கும் வகையில் விரைவில் தீயை அணைத்து சுத்திகரிப்பு ஆலைகளை பாதுகாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.