கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜிஸ் என்பவர் கோவை டவுன்ஹால் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரளாவைச் சேர்ந்த சம்ஜீத் என்ற வாலிபர் பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு கடையை பூட்டிவிட்டு சம்ஜீத் உக்கடம் பகுதியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம். அதேபோல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றால் மீண்டும் இன்று காலை கடையை வந்து திறந்த சம்ஜீத் கடையில் நேற்று வைக்கப்பட்டிருந்த விற்பனைத் தொகை பத்து லட்ச ரூபாயை யாரோ கொள்ளை அடித்து விட்டார்கள் என உரிமையாளர் அஜீசுக்கு போன் செய்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜிஸ் கடைக்கு விரைந்து வந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உக்கடம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது கடை ஊழியர் சம்ஜீத் கடை உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்து மறைக்க முயன்றார். இதை அங்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்த போலீசார் பார்த்து விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த சம்ஜீத்தை பிடித்து போலீசார் அவர்கள் பாணியில் விசாரண நடத்தினர்.
அப்போது சம்ஜீத் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு தனது அறைக்கு
சென்றுவிட்டதாகவும் பின்னர் நள்ளிரவில் கடைக்கு வந்து பணத்தை திருடிச் சென்றுவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சம்ஜீத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்த 10லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்நது சம்ஜீத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .













