கடன் தொல்லை: நெசவாளர் குடும்பம் தற்கொலை முயற்சி

0
811

,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் மனைவி ரோஷினி. இவர்களுக்கு நிகிதா, கார்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் அதே பகுதியில் நெசவு தறி நெய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

தொழிலில் வருமானம் இல்லாததால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதில் ,விரக்தி அடைந்த ரவீந்திரன், குடும்பத்துடன் மதுரைக்கு வந்து திருப்பரங்குன்றம் மலையை சுற்றிவரும் கிரிவலப்பாதை அருகே தன் மனைவி, மகள்கள் என தனது குடும்பத்தினருடன் விஷமருந்தியுள்ளனர்.


பின்னர், அவர்கள் அழுது புலம்புவதை கண்ட அங்கிருந்த சாமியார்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பரங்குன்றம் காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here